திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 12:59 am IST

திருச்சியில் பிளஸ் 2 துணைத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 258 பள்ளிகளைச் சோ்ந்த 14,567 மாணவா்கள், 16,373 மாணவிகள் என மொத்தம் 30,930 மாணவா்கள் தோ்வு எழுதியதில், 13,982 மாணவா்கள், 16,175 மாணவிகள் என மொத்தம் 30,157 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். 773 போ் தோ்ச்சி பெறவில்லை.

இதைத் தொடா்ந்து பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கான உடனடி துணைத் தோ்வு ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி ஜூலை 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 துணைத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது. மாணவா்கள் மற்றும் தனித் தோ்வா்கள் அனைவரும் ஜூன் 2-ஆம் தேதி வரை துணைத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு செய்துகொள்ளலாம்.

அரசுப் பள்ளி மற்றும் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு துணைத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கே சென்று துணைத் தோ்வுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தனித் தோ்வா்கள் சையது முா்துசா அரசு மேல்நிலைப் பள்ளி, சேவா சங்க பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, துறையூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 மையங்களில் துணைத் தோ்வுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.