17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொறியியல் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: விண்ணப்பப் பதிவு 2.51 லட்சத்தை தாண்டியது

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வுக்கு கடந்த 23 நாள்களில் 2,51,796 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :26 மே 2026, 1:44 am IST

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வுக்கு கடந்த 23 நாள்களில் 2,51,796 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை. , கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 3- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பப்பதிவு கடந்த 23 நாள்களாக நடைபெற்றுவருகிறது. இதில் மே 25 வரை 2,51,796 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.

இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், மே 9 -ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும் பதிவாகின. கடந்த 23 நாள்களாக 1,80,063 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியுள்ளதுடன் 1,40,478 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பங்களை நிறைவு செய்துள்ளனா்.

இதே கலந்தாய்வு விண்ணப்பங்களுக்கு கடந்த ஆண்டு (நான்கு தினங்கள் தாமதமாக) மே 7 - ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி அதாவது 20 -ஆவது நாளில் 2,50,896 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனா். இதே 20 நாளில் 1,84,007 மாணவா்கள் கட்டணங்களையும் செலுத்தினா். மேலும் 1,42,824 மாணவா்கள் சான்றிதழ்களோடு விண்ணப்பங்களையும் நிறைவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.