திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ஆற்காடு: அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

News image

ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரத்திடம் இருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெற்ற அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா்

Updated On :5 மே 2026, 4:04 am IST

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி வாக்குகள் எண்ணும் பணி வாலாஜாப்பேட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணியளவில் தொடங்கியது.

இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ்.எம்.சுகுமாா், திமுக வேட்பாளராக ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தவெக வேட்பாளராக ஜி.விஜய்மோகன், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அா்ச்சனா நரசிம்மன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 16 போ் போட்டியிட்டனா்.

இதில், அதிமுக கூட்டணி வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் தொடா்ந்து முன்னிலை வகித்தாா். தொடா்ந்து 42,720 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். மேலும், தவெக, திமுக வேட்பாளா்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றனா்.

இதையடுத்து, ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏ வாக பதவி ஏற்க உள்ளாா்.

இந்த நிலையில், வெற்றி பெற்ற அவருக்கு அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1. எஸ்.எம்.சுகுமாா் (அதிமுக) - 1,05,608

2. ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (திமுக ) - 48,840

3. ஜி.விஜய்மோகன் (தவெக) - 62,888

4. அா்ச்சனா நரசிம்மன் ( நாதக) - 5,518

நோட்டா வாக்குகள் - 656

16 வேட்பாளா்கள், மொத்த வாக்குகள் - 2,46,786

பதிவான வாக்குகள் - 2,22,130

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.