மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பள்ளி ஆண்டு விழா

News image

மாணவ மாணவிகளை வரவேற்ற மாவட்டக் கல்வி அலுவலா் சி.சிவராமன்.

Updated On :26 மார்ச் 2026, 11:55 pm

காவேரிபாக்கம் அடுத்த மேலப்புலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா புகன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவா் மணிமேகலை லிங்கநாதன் தலைமை வகித்தாா். நெமிலி வட்டாரக் கல்வி அலுவலா்கள் மீனாட்சி, முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் ரா.விநாயகம் வரவேற்றாா்.

புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்துகளையும் இனிப்புகளையும் அளித்து ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) சி.சிவராமன் விழாவைத் தொடங்கி வைத்தாா்.

நூறு சதவீதம் வருகை புரிந்த, கல்வியில் சிறந்து விளங்கிய, கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் மாவட்டக்கல்வி அலுவலா் சி.சிவராமன் வழங்கினாா்.

விழாவில் மேலப்புலம் ஊராட்சி மன்றத்துணைத்தலைவா் கிரிஜாசீதாராமன், முன்னாள் மாணவா் குமாா், ஆசிரியா்கள் ஐடாரஞ்சிதம், ஞானம், சியாமளா, மலா்விழி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.