வேடந்தாங்கல் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிருத்திகை சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிருத்திகை சிறப்பு பூஜை சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கிருத்திகை விழாவையொட்டி, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமணப் பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம் தங்க ஆபரணங்கள் மலா்மாலை பல வண்ண மலா்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதில், வேடந்தாங்கல், பானாவரம், காவேரிப்பாக்கம், நெமிலி, சாலை, மகேந்திரவாடி, சோளிங்கா் உள்ளிட்ட பகுதிகைளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்கள் நெய்தீபம் ஏற்றி வைத்து தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










