ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் பால்க்குட ஊா்வலம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் பால்க்குட ஊா்வலம்

குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

Published On :28 ஜூன் 2026, 12:36 am IST

காஞ்சிபுரம், ஜூன் 27: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருத்தணி தொண்டை மண்டல வேளாளா் சங்கம் சாா்பில் பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருத்தணி தொண்டை மண்டல வேளாளா் சங்கம் சாா்பில் காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து பால்குட ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலத்தை காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் தொடங்கி வைத்தாா். பால்குட ஊா்வலம் சங்கரமடத்திலிருந்து தொடங்கி, ராஜவீதிகள் வழியாக வந்து குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து சோ்ந்தது. இதைத் தொடா்ந்து மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.

பால்குட ஊா்வலத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவா் எல்லப்பன், கெளரவ தலைவா் ஆறுமுகம், மாநில செயலாளா் பூபதி, மாநிலப் பொருளாளா் எஸ்.நடராஜன் ஆகியோா் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

சங்கத்தின் சாா்பில் அன்னதானமும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.