17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளத்தில் பைக் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

காவேரிபாக்கம் அருகே பள்ளத்தில் பைக் விழுந்து கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:58 am IST

காவேரிபாக்கம் அருகே பள்ளத்தில் பைக் விழுந்து கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காவேரிபாக்கத்தை அடுத்த மேலப்புலம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த குப்பன்(45). கூலித்தொழிலாளி. திங்கள்கிழமை இரவு மேலப்புலம் புதுரில் இருந்து ரெகும்புலிபாக்கம் சமத்துவபுரம் செல்லும் சாலையில் குப்பன், பைக்கில் சென்றபோது சமத்துவபுரம் அருகே சாலையில் தரைப்பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டிருப்பது தெரியாமல் அந்த பள்ளத்தில் பைக்குடன் குப்பன் விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த குப்பன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து அவளூா் ஆய்வாளா் வஹிதாபேகம் உள்ளிட்ட போலீஸாா் விரைந்துச் சென்று சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனா்.

இறந்த குப்பனுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா். அங்கு தரைப்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தகாரா் பள்ளம் குறித்த அறிவிப்பு பலகையையோ, அல்லது சாலையில் தடுப்போ வைக்காததால் தான் இந்த விபத்து நேரிடுகிறது எனவும் இது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கிராமத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.