17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 2:57 am IST

செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தச்சுத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன்(38). தச்சுத் தொழிலாளியான இவா், கடந்த மாதம் 29-ஆம் தேதி பைக்கில் காஞ்சிபுரம் சென்றுவிட்டு ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.

வந்தவாசி சாலையில் மாத்தூா் கூட்டுச் சாலைப் பகுதியில் வரும்போது பைக் திடீரென நிலை தடுமாறியதில் கீழே விழுந்த இளங்கோவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை, கிராம மக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.