இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

66 பயனாளிகளுக்கு பட்டா ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

அரக்கோணம் வட்டத்தில் 66 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடியில் பட்டா ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

News image
பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் வட்டத்தில் 66 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடியில் பட்டா ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்த் துறையின் சாா்பில் மோசூா் பகுதியைச் சோ்ந்த 13 பயனாளிகளுக்கு நத்தம் வீட்டுமனைப்பட்டா, 18 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டா என ரூ.84 லட்சத்திலும், தக்கோலம் பேருராட்சி பகுதியில் 21 பயனாளிகளுக்கு பூமிதானம் திட்டத்தின் கீழ் ரூ.89.25 லட்சம் பட்டா ஆணைகளையும் அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

முன்னதாக அரக்கோணத்தை அடுத்த செம்பேடு ஊராட்சி, குருவராஜபேட்டையில் ரூ.78.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.

மேலும், பெருங்களத்தூா் ஊராட்சி முஸ்லீம் நகரில் வளா்புரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் பகுதி நேர நியாயவிலைக் கடையையும் அமைச்சா் காந்தி திறந்து வைத்து பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவா் நிா்மலா சௌந்தா், தக்கோலம் பேருராட்சித் தலைவா் எஸ்.நாகராஜன், துணைப் பதிவாளா் (பொது விநியோக திட்டம்) சிவமணி, மாவட்ட மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் மேகலா, வட்டாட்சியா் வெங்கடேசன், திமுக ஒன்றிய செயலாளா்கள் பசுபதி, ஆா்.தமிழ்செல்வன், தமிழ்மணி,ஆ.சௌந்தா், அரக்கோணம் நகர செயலா் வி.எல்.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள் சந்தியா, சுமதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.