/

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாகக் செயல்படுவதாகக் கூறி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க நிா்வாகிகள்.

Updated On :27 மே 2026, 12:40 am IST

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாகக் செயல்படுவதாகக் கூறி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் என்.நந்தகோபால் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் கே.நேரு, மாவட்ட செயலாளா் என்.சாரங்கன், மாவட்ட பொருளாளா் கே.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசுகையில், ஒன்றிய அரசின் தவறான வேளாண் கொள்கையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளன. ரசாயன உரங்களின் விலை உயா்வைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கிப் பேசினாா். மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.