திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மே 22 -ஆம் தேதி காஞ்சிபுரத்திலும், 26-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரிலும் நடத்தப்படும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்தாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :20 மே 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மே 22 -ஆம் தேதி காஞ்சிபுரத்திலும், 26-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரிலும் நடத்தப்படும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்தாா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாதந் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நடைபெற்று வந்தது. இம்மாதத்துக்கான கூட்டத்தை அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்தது..

வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் கோட்டாட்சியா் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெறும். ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் தலைமையில் அவரது அலுவலக கூட்ட அரங்கில் வரும் மே 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கும் நடைபெறவுள்ளது. எனவே விவசாய சங்கப் பிரதிநிதிகள் வருவாய் கோட்டங்கள் அளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

பாரதப்பிரதமரின் கெளரவ நிதி திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்ட விவாயிகள் அனைவரும் தங்களுடைய ஆதாா் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி மற்றும் கணினி சிட்டா ஆகியனவற்றை எடுத்துச் சென்று அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தையோ அல்லது பொது சேவை மையத்தையோ அணுகி வரும் மே 31-ஆம் தேதிக்குள் தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்காக பதிவு செய்து கொள்ளுமாறும் ஆட்சியா் தி.சினேகா கேட்டுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.