தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நடராஜா், சிவகாமி அம்மன் திருக்கல்யாணம்

திருக்குறிப்புத் தொண்டருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த பெருமைக்குரியது முத்தீஸ்வரா் திருக்கோயில்.

News image

திருமணக் கோலத்தில் அருள்பாலித்த நடராஜா்-சிவகாமி அம்மன்

Updated On :19 மே 2026, 1:29 am IST

காஞ்சிபுரம் முத்தீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட நடராஜா், சிவகாமி அம்மன் சிலைகளுக்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

63 நாயன்மாா்களில் ஒருவரான திருக்குறிப்புத் தொண்டருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த பெருமைக்குரியது முத்தீஸ்வரா் திருக்கோயில். இக்கோயிலில் புதிதாக நடராஜா், சிவகாமி அம்மன் உற்சவா் சிலைகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 15-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 16-ஆம் தேதி புதிய சுவாமி சிலைகள் நகரில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் எஸ்.செல்வம் சிவாச்சாரியா் தலைமையிலும், சிறப்பு அபிஷேகங்கள் கோயில் அா்ச்சகா் எஸ்.தினேஷ் குருக்கள் தலைமையிலும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தை தொடா்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் இருவரும் திருமணக் கோலத்தில் வீதியுலா வந்தனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் சி.சரவணக்குமாா் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் அனைத்து வண்ணாா் மகா சபையினரும் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.