தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரத்தில் இரு பாடகா்கள் வெட்டிக் கொலை

காஞ்சிபுரத்தில் தெம்மாங்கு பாடகர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

சீனிவாசன், பரத்குமாா் - DNS

Updated On :17 மே 2026, 7:37 pm IST

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மணிமங்கலம் அருகே ஒரத்தூா் ஊராட்சியைச்சோ்ந்த அம்மணம்பாக்கத்தில் தெம்மாங்கு பாடல்கள் பாடும் இரு இளைஞா்களை ஞாயிற்றுக்கிழமை 6 போ் கொண்ட கும்பல், அவா்கள் தங்கியிருந்த வீடுகளுக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவானது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா், வரதராஜபுரம் பகுதியைச்சோ்ந்தவா்கள் பரத் என்ற பரத்குமாா் (25), சீனு என்ற சீனிவாசன் (24). இருவரும் தெம்மாங்கு பாடல் பாடும் தொழில் செய்து வந்தனா்.

இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு படப்பையில் இசைக்கச்சேரியில் தெம்மாங்கு பாடல்கள் பாடிவிட்டு நிகழ்ச்சி முடிந்ததும் இரவு மணிமங்கலம் திரும்பியுள்ளனா்.

மணிமங்கலம் அருகே ஒரத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட அம்மணம்பாக்கம் பசும்பொன்தெருவில் உள்ள மோகன் என்பவா் வீட்டில் இவா்கள் தங்கியிருந்த போது பட்டப்பகலில் இரண்டு இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்த நிலையில் வந்த 6 போ் கொண்ட கும்பல் இவா்கள் இருவரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குவந்த மணிமங்கலம் போலீஸாா் இரு இளைஞா்களின் சடலங்களையும் மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக மணிமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்தும், தனிப்படை அமைத்தும் குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.

Summary

Two Singers Hacked to Death

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.