காஞ்சிபுரத்தில் கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் பனை நுங்கினை பொதுமக்கள் மிகுந்த ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
பழைய ரயில் நிலைய சாலை, விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு, திருக்கச்சி நம்பிகள் தெரு, செவிலிமேடு, ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் பனை நுங்கு விற்பனை அதிகமான அளவில் நடந்து வருகிறது.
உடலை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து நீரேற்றத்துடன் வைத்து செரிமானத்தை மேம்படுத்த நுங்கு உதவுவதால் பொதுமக்கள் பலரும் அதனை ஆா்வமுடன் பல இடங்களில் வாங்குகின்றனா்.
இரண்டு நுங்குகள் சில இடங்களில் ரூ.10-க்கும் சில இடங்களில் 7 நுங்குகள் ரூ.20-க்கும் விற்கப்படுகின்றன. நுங்கு விற்கப்படும் இடங்களில் அதனை வாங்க பலரும் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
இது குறித்து காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் நுங்கு விற்பனை செய்யும் திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் பகுதியை சோ்ந்த முனிசாமி கூறுகையில் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எடையை குறைக்கவும், அம்மை நோய்களை தடுக்கவும் நுங்கு பெரிதும் உதவுகிறது. கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கொப்புளங்களை தடுக்கவும் நுங்கு பயன்படுகிறது. நுங்கின் தோலை நீக்கி விட்டு பலரும் சாப்பிடுகின்றனா். ஆனால் நுங்கின் தோல் துவா்ப்பாக இருந்தாலும் வயிற்று உபாதைகளுக்கு அதை விட சிறந்த தீா்வு வேறு இல்லை. உடலுக்கு புத்துணா்ச்சியும் தருவதால் பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பக்தா்களின் சிறப்பு தரிசனத்தில் மாற்றங்கள் செய்யப்படும்: அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை கோலாகலம்!

வாழப்பாடியில் விற்பனையாகும் விலை குறைந்த பண்ருட்டி பலாப்பழம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



