மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

யதோத்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்

News image

காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :18 மார்ச் 2026, 8:20 pm

காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலின் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி கோயிலில் 12 ஆம் தேதி கொடியேற்றமும்,மாலையில் சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றது. கடந்த 14 -ம் தேதி கருடசேவையும், மாலையில் ஹனுமந்த வாகனத்திலும் பெருமாள் அலங்காரமாகி வீதியுலா வந்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் யதோத்தகாரி பெருமாள் தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் தாங்களாகவே கற்பூர ஆரத்தி காண்பித்து பெருமாளை தரிசித்தனா். வியாழக்கிழமை காலை தொட்டித் திருமஞ்சனமும், மாலையில் குதிரை வாகனத்தில் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி உற்சவமும் மாலையில் வெட்டி வோ் சப்பரத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையில் ஆலய பட்டாச்சாரியா்கள், கோயில் பணியாளா்கள், உற்சவதாரா்கள் செய்திருந்தனா்.