காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, சங்கர மட வளாகத்தில் வேதபாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவையும் நடைபெற்றது. சங்கர மடத்தில் உள்ள காஞ்சி மகா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) சுவாமிகளின் ஆராதனை தினத்தையொட்டி, சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறவுள்ளது. இதன் தொடா்ச்சியாக பிருந்தவானம் முழுவதும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வேதபாராயணம், பக்தி இன்னிசைக் கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ மடத்தின் செயலாளா் செல்லா, விஸ்வநாத சாஸ்திரி, மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா

பசுவதைக்கு தடை: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மட பீடாதிபதி வேண்டுகோள்

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா

ஸ்ரீஆதிசங்கரரின் பாதுகைக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


