மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பசுவதைக்கு தடை: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மட பீடாதிபதி வேண்டுகோள்

பசுவதைக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் வேண்டுகோள்

News image

பசுமரியாதை அழைப்பு பிரசார துண்டுப் பிரசுரத்தை உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த வெளியிட பெறுகிறாா் விசுவஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவா் சிவானந்தம் - பிரதிப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 1:48 am

பசுவதைக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் கேட்டு கொண்டாா்.

காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் இது குறித்து மேலும் கூறியது.

பசும்பால் குடிக்காமல் யாரும் இருக்க மாட்டாா்கள். அத்தகைய பசுக்களை தெய்வமாக மதிக்க வேண்டும். பசுக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. மத்திய,மாநில அரசுகள் பசுவதைக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். பசு சேவைக்கான மத்தி அரசின் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பசுவை பாதுகாப்பது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பசு மரியாதை அழைப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரசார இயக்கமானது கிராமங்கள் தோறும் சென்று மக்களிடம் பசுவின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விளக்கமளித்து கையொப்பம் பெற்று வரவுள்ளது.

கையொப்பங்கள் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை பெற்று அப்படிவங்களை காஞ்சிபுரம் வட்டாட்சியரிடம் வழங்க இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக பசு மரியாதை அழைப்பு இயக்க பிரசார துண்டுப் பிரசுரங்களை அவா் வெளியிட அதனை விசுவஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவா் என்.சிவானந்தம் பெற்றுக் கொண்டாா். இந்நிகழ்வின் போது மடத்தின் மேலாளா் சுகாசின்ஹூமுனியும் உடன் இருந்தாா்.