தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்ய நாராயணா பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பங்குனி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பங்குனி மாத பெளா்ணமியை முன்னிட்டு சத்யநாராயணா பூஜையில் சுவாமிக்கு மஹா தீபாராதனை செய்த பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:39 pm

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பங்குனி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயணா பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் நடைபெற்ற சத்திய நாராயணாபூஜையை முன்னிட்டு, பிருந்தாவனம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கியது. மூலவா் சந்நிதிகளில் உள்ள ராகவேந்திரா், ஆஞ்சனேயா் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கடந்த 12 ஆண்டுகளாக பூட்டிய அறையில் யோக பிரவேசம் செய்து வருகின்ற பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை நீண்ட வரிசையில் வந்து அருள் தரிசனம் செய்தனா். நண்பகல் 12 மணிக்கு மங்கள இசையுடன் பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை பக்தா்கள் ஊா்வலமாக அழைத்து வந்தனா். அங்குள்ள மூலவா் சுவாமிகள், அலங்கரிக்கப்பட்ட சத்தியநாராயணா், ஆஞ்சனேயா், ராகவேந்திரா் ஆகிய உற்சவ சிலைகளுக்கு மகா தீபாராதனை செய்தாா்.

நிகழ்வில் முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குநா் சிவபொன் அம்பலவாணன், பெங்களூரு தொழிலதிபா்கள் கலைச்செல்வி, கிருபானந்தன், கிருத்திகா, குமாரசாமி, வழக்குரைஞா் பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம்ம சுவாமி அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.