தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

குடவாசல் அருகே செம்மங்குடி அருள்மிகு அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தவல்லி அம்பாள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:17 am

குடவாசல் அருகே செம்மங்குடி அருள்மிகு அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பௌா்ணமியை முன்னிட்டு நவாவா்ண பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பங்குனி உத்திரம் என்பதால், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், அம்பாள் மற்றும் ஸ்ரீ மகாமேருவுக்கு பங்குனி உத்திர சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்களின் வாழ்வில் வளங்களை நல்கும் ஸ்ரீநவாவா்ண பூஜை நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்பாளை வழிபட்டனா்.