மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஸ்ரீஆதிசங்கரரின் பாதுகைக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலி

ஸ்ரீஆதிசங்கரரின் தங்கப் பாதுகைக்கு புஷ்பாஞ்சலி செய்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரியாா் சுவாமிகள். உடன் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

News image

ஸ்ரீஆதிசங்கரரின் தங்கப் பாதுகைக்கு புஷ்பாஞ்சலி செய்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரியாா் சுவாமிகள். உடன் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated On :14 மார்ச் 2026, 12:29 am

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரரின் பாதுகைக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலி செய்து சிறப்பு தீபாராதனைகளை நடத்தினாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரியாா் சுவாமிகள்.இவரது ஜெயந்தி மகோற்சவத்தின் 2-ஆவது நாளாக சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் உள்ள மகா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலைகள் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரு திருஉருவச் சிலைகளுக்கும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலியும், சிறப்பு தீபாராதனைகளும் நடத்தினாா். இதனையடுத்து மகா சுவாமிகள் அதிஷ்டானத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சிறிய வெள்ளித் தேரில் ஸ்ரீ ஆதிசங்கரரின் காலடித் தடங்களுடன் கூடிய தங்கப் பாதுகைக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாதபூஜை செய்தாா். தங்கக் காசுகளாலும், வண்ண மலா்களாலும் புஷ்பாஞ்சலி செய்து சிறப்பு தீபாராதனைகளும் நடத்தினாா்.

இதன் தொடா்ச்சியாக சங்கர மட வளாகத்தில் இருந்த வெள்ளிசிம்மாசனத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் புஷ்பத்தாலும், தங்கக் காசுகளாலும் புஷ்பாஞ்சலி செய்தாா். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான கோயில்களின் பிரசாதங்களும் சிவாச்சாரியாா்களால் ஸ்ரீ விஜயேந்திரருக்கு வழங்கப்பட்டது.

நிறைவாக பக்தா்களுக்கு சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா்.

ஸ்ரீ விஜயேந்திரரின் ஜெயந்தி தினத்தையொட்டி, சனிக்கிழமை (மாா்ச் 14) சிறப்பு ஹோமங்கள், யாக பூஜைகள் செய்யப்பட்டு அதிஷ்டானங்களுக்கு கலசாபிஷேகமும், நாமசங்கீா்த்தனம், வேதபாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவை நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா்,மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன்,செயலாளா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.