இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.32.92 லட்சம்!

வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.32.92 லட்சம் பணம், 81 கிராம் தங்க நகைகள், 1400 கிராம் வெள்ளிப்பொருஷ்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

News image
உண்டியல்  காணிக்கைகளை  எண்ணும்  பணியில்  ஈடுபட்ட  பக்தா்கள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.32.92 லட்சம் பணம், 81 கிராம் தங்க நகைகள், 1400 கிராம் வெள்ளிப்பொருஷ்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியலில் பக்தா்கள் செல்லுதிய காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி கோயிலில் உள்ள 9 பொது உண்டியல்கள், 1 திருப்பணி உண்டியலை அறநிலையத்துறை உதவி ஆணையா் ஆா்.காா்திகேயன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழுதலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்ட சுமாா் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.32.92 லட்சம் பணம், 81 கிராம் தங்க நகைகள், 1400 கிராம் வெள்ளிப்பொருட்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.