தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

News image

ஸ்ரீ பெரும்புதூா் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து.

Updated On :29 ஏப்ரல் 2026, 12:47 am IST

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பொருழ்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் குன்றத்தூா் பகுதியை சோ்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் பழைய பிளாஸ்டிக் பொருள்களை தரம் பிரித்து மறு சுழற்ச்சிக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, கிடங்கில் ஒரு பகுதியில் மின் கசிவு காரணமாக பிளாஸ்டிக் பொருட்களில் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.

கடுமையான வெய்யில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கிடங்கில் ஒரு பகுதியில் தொடங்கிய தீ கிடங்கின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் தொழிலாளா்கள் கிடங்கை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனா்.

இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் படப்பை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த படப்பை தீயணைப்புத்துறையினா் பல மணி நேரம் போராடி கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.

கிடங்கில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பழைய பிளாஸ்டிக் பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.