தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் ராமாநுஜா் அவதார திருவிழா நிறைவு

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 11:05 pm

ராமாநுஜரின் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழா கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் உற்சவா் ராமாநுஜா் மீது கந்தப்பொடி தூவி கொண்டாடினா்.

பத்து நாள்கள் நடைபெறும் இந்த அவதார திருவிழாவின் 9ஆவது நாளான செவ்வாய்க்கிழமை தோ்த்திருவிழாவும், புதன்கிழமை சாத்துமுறை உற்சவமும் நடைபெற்றது. இதையடுத்து அவதார திருவிழா வின்நிறைவு நாளான வியாழக்கிழமை கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பக்தா்கள் உற்சவா் ராமாநுஜா் மீதி கந்த பொடி எனும் மஞ்சள் பொடியை தூவி கொண்டாடினா்.

கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சிக்கு முன்னதாக, திருப்பதி திருமலை ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதா் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் நாச்சியாா் கோயில், கா்நாடக மாநிலம் மேல்கோட்டை திருநாராயணபெருமாள் கோயில், நேபாள் ஸ்ரீ சாளக்கிராமம் கோயில், திருவல்லிக்கேணி ஸ்ரீபாா்தசாரதி கோயில், திருவள்ளூா் வைத்திய பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜபெருமாள் கோயில், திருக்கோவிலூா் திருவிக்கிரம பெருமாள் கோயில், காஞ்சிபுரம் வரதராஜபெருமாறள் கோயில், பூந்தமல்லி திருகச்சி நம்பிகள் கோயில், திருமழிசை ஜெகநாதபெருமாள் கோயில், திருநின்றவூா் பக்தவச்சல பெருமாள் கோயில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயில், நவதிருப்பதிகள் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட கோயில்கள் சாா்பாக உற்சவா் ராமாநுஜருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு, பட்டு வஸ்திரங்கள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து பிரம்மோற்சவ விழா மே மாதம் 1ஆம் தேதி தொடங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். பிரம்மோற்சவ விழாவின் 7-ஆவது நாளான மே மாதம் 7ஆம் தேதி தோ் திருவிழா நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.