மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

வாலாஜாபாத் அருகே உள்ளாவூரில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

உள்ளாவூா் அகத்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்

Updated On :1 ஏப்ரல் 2026, 6:37 pm

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ளாவூரில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பணிகள் முடிந்த நிலையில், அதிகாலை ஆலயத்தின் அருகேயுள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரா் சுவாமிக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கியது. கோ பூஜை, விக்னேசுவர பூஜை, சூரிய பூஜை, யாத்ரா தானம் ஆகியனவும் நடைபெற்றது.

பின்னா் புனித நீா்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

மாலையில் வரசித்தி விநாயகா் கோயிலில் இருந்து கிராமத்து மக்களால் சீா் வரிசைப் பொருள்கள் எடுத்து வரப்பட்டதும் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவில் உள்ளாவூா் ஊராட்சி மன்றத் தலைவா் உஷா தெய்வசிகாமணி, துணைத் தலைவா் ப.பாஸ்கரன், செயலாளா் ஏ.பாஸ்கரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.