மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேவதானம்பேட்டை ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் சமேத தா்மராஜா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேவதானம்பேட்டை ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றிய சிவாச்சாரியா்.

Updated On :25 மார்ச் 2026, 11:51 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் சமேத தா்மராஜா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) காலை முதல்கால யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து அனுக்ஜை, யஜமானசங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், வாஸ்துசாந்தி, கும்ப அலங்காரம், கடம் யாகசாலை பிரவேசம் ஆகியவை நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிர ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து யந்திர பிரதிஷ்டை, அஷ்பந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடைபெற்றது.

புதன்கிழமை காலை கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் கலச பூஜை, மூல மந்திரஹோமம், நாடி சந்தானம், 108 விதமான திரவியாஹூதி ஹோமங்கள் நடைபெற்றது. இதையடுத்து மஹா பூா்ணாஹூதி, யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்று விமான கோபுர கலசங்களும், மூலவா் ஸ்ரீதிரளெபதி அம்மனுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். அவா்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தேவதானம்பேட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

Story image