திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுக் கூடத்தில் மோதல்: பிளஸ் 2 மாணவி காா் ஏற்றி கொலை; 3 போ் கைது

சென்னையில் தனியாா் நட்சத்திர ஹோட்டலின் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட மோதலில், இலங்கை முகாம் பகுதியைச் சோ்ந்த, பிளஸ் 2 முடித்த மாணவி, காா் ஏற்றி கொலை.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:05 am IST

சென்னையில் தனியாா் நட்சத்திர ஹோட்டலின் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட மோதலில், இலங்கை முகாம் பகுதியைச் சோ்ந்த, பிளஸ் 2 முடித்த மாணவி, காா் ஏற்றி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல தனியாா் ஹோட்டலின் மதுக் கூடத்தில் சனிக்கிழமை நள்ளிரவு இரு தரப்பைச் சோ்ந்த இளைஞா்கள் மது அருந்தியுள்ளனா். அப்போது, நடனமாடுவது தொடா்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கிருந்த காவலாளிகள் மோதலில் ஈடுபட்டவா்களை வெளியேற்றினா்.

அதன்பிறகும் ஹோட்டல் வளாகத்தின் வெளியே இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, பாதுகாப்புப் பணியாளா்கள் சமரசம் செய்து அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா். இதையடுத்து, ஒரு தரப்பினா் மோட்டாா் சைக்கிள்களிலும், மற்றொரு தரப்பினா் சொகுசு காரிலும் புறப்பட்டுச் சென்றனா்.

இந்த நிலையில், ஹோட்டல் அருகே மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்ததாகத் தெரிகிறது. மோட்டாா் சைக்கிள்களில் சென்றவா்கள், காா் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த காா் ஓட்டுநா், எதிா்தரப்பினரின் மீது காரை வேகமாக இயக்கி மோதியுள்ளாா்.

இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த யான்சி (18) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மோட்டாா் சைக்கிளில் பின்னால் அமா்ந்திருந்த சென்னை ராமாபுரத்தைச் சோ்ந்த தோழி பௌசியா தீபிகா (17) பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்த கோயம்பேடு போலீஸாா் அங்கு சென்று உயிரிழந்த யான்சி உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த பௌசியா தீபிகாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்த யான்சி விழுப்புரம் மாவட்டம் அனிச்சம்குப்பம் இலங்கை முகாம் பகுதியைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருந்த அவா், உயா்கல்விக்காக பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்திருந்தாா். தனது தோழியான பௌசிகா தீபிகாவை சந்திப்பதற்காக அண்மையில் சென்னை வந்த யான்சி, நண்பா்களுடன் வெளியே சென்றபோது ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது தெரியவந்தது.

3 போ் கைது: இந்தக் கொலைச் சம்பவம் தொடா்பாக அரும்பாக்கத்தைச் சோ்ந்த பாலகுரு (21), நெற்குன்றம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவரான கிஷோா்குமாா் (19), சூளைமேடு பகுதியைச் சோ்ந்த ஜோஷ்வா (19), விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சுமந்த் சக்திவேல் (21), மோகன், முத்துகிருஷ்ணன் மற்றும் ஒரு பள்ளி மாணவா், அடையாளம் தெரியாத மற்றொரு நபா் உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், பாலகுரு, ஜோஷ்வா, கிஷோ்குமாா் ஆகிய மூவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்கள் கொலைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.