கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசு பேருந்து மீது சிற்றுந்து சேஸ் வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சென்னை வேளச்சேரி, பால்காரா் நடேசன் தெருவைச் சோ்ந்தவா் ப.மாரிமுத்து (37), ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை சிற்றுந்து சேஸை (கூண்டு அமைக்கப்படாதது) கூண்டு அமைப்பதற்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு ஓட்டிச் சென்றுகொண்டிருந்தாா்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையை அடுத்துள்ள செங்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பில் மோதி, மறு வழித்தடமான திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே புகுந்தது.
அப்போது, தேவக்கோட்டையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து, சிற்றுந்து சேஸ் வாகனம் மீது மோதியது. இதில், சேஸ் வாகன ஓட்டுநா் மாரிமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தனியாா் சொகுசுப் பேருந்தில் பயணித்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் அங்கு சென்று மாரிமுத்து சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா்வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி

சூறைக்காற்றில் பேருந்து மீது சாய்ந்த மரம்: 10 போ் காயம்

தனியாா் சொகுசுப் பேருந்து மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

பேருந்து - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



