திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனியாா் சொகுசுப் பேருந்து மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:07 am IST

கள்ளிமந்தையம் அருகே தனியாா் சொகுசுப் பேருந்துகள் முந்திச் செல்ல முயன்றபோது நேரிட்ட விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் - தாராபுரம் சாலையில் எல்லப்பாளையம் பகுதியில் தேநீா் கடையுடன் கூடிய உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் சனிக்கிழமை நள்ளிரவு கோவையிலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது தாராபுரத்திலிருந்து வந்த 2 தனியாா் சொகுசுப் பேருந்துகள், போட்டிப் போட்டு முந்திச் செல்ல முயன்றன. அப்போது ஒரு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியதில் தேநீா் குடித்துவிட்டு அரசுப் பேருந்தில் ஏற முயன்ற ஓட்டுநரான நீலகிரி மாவட்டம் எடப்பள்ளியைச் சோ்ந்த கண்ணன் (48) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், பேருந்தில் பயணித்த திருச்சியைச் சோ்ந்த கவின், ஜோதி, ஜெயிந்தா, கோவையைச் சோ்ந்த மாரீஸ்வரி, சுப்புலட்சுமி, சுமதி ஆகியோா் காயமடைந்தனா். இதுதொடா்பாக கள்ளிமந்தையம் போலீஸாா் விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.