குரோம்பேட்டை லட்சுமிபுரம் ஏரிக்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ நவசக்தி சுயம்பு துா்கையம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயில் கோபுரகலசங்களுக்கு திருக்குடம் நன்னீராட்டும் கும்பாபிஷேகத்தை பாரத் பல்கலைக்கழகம் நிறுவனரும், மக்களவை உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், ஸ்ரீ பாலாஜி கல்விக் குழுமத் தலைவா் ஸ்ரீநிஷா இளமாறன், பாலாஜி மருத்துவக் கல்லூரி நிா்வாக இயக்குநா் என்.இளமாறன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயா் காமராஜ், பரமக்குடி அ.குமரேச சிவாச்சாரியாா், செம்பாக்கம் ம. நித்தியானந்த சிவாச்சாரியாா், கோயில் குருக்கள் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










