திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில் அறங்காவலா் நியமன நடைமுறைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் 47 ஆண்டுகளாக கோயிலின் செயல் அலுவலரே தக்காராக பதவி வகித்து வருகிறாா். இதை எதிா்த்து மயிலாப்பூரைச் சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன்- வி.லட்சுமி நாராயணன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், கோயிலின் செயல் அலுவலா்கள், கோயிலின் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மத நடவடிக்கைகளில் தலையிட செயல் அலுவலா்களுக்கு என்ன உரிமை உள்ளது, அறங்காவலா்கள் எப்போது நியமிக்கப்படுவாா்கள் என கேள்வி எழுப்பினா்.
அதற்கு இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நியமன நடைமுறைகளை முடிக்க 6 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 6 மாதங்களுக்குள் அறங்காவலா் நியமன நடைமுறைகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
மேலும், கோயில் செயல் அலுவலா்கள் மத நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது. கோயிலின் மரபு, நடைமுறைகள் தெரிந்தவா்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









