17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்

சென்னையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 30, 31) நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை”நிகழ்ச்சியில் பங்கேற்பவா்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:47 am IST

சென்னையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 30, 31) நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை”நிகழ்ச்சியில் பங்கேற்பவா்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நேரு உள்விளையாட்டு அரங்கில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 30,31 ) இளையராஜா இசை”நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகா்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்கவுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்பவா்களுக்காக ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் தனித்தனியாக க்யூஆா் குறியீடு உள்ள பயணச்சீட்டுகள் வழங்கப்படும். இந்தப் பயணச் சீட்டை பயன்படுத்தி எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு மிக அருகில் உள்ள புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்று திரும்ப முடியும்.

இந்த நிகழ்ச்சிக்காக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. வழித்தடம் 1-இல் புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகா் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். வழித்தடம் 2-இல் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.