திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை பெரம்பூரில் திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 1:39 am IST

சென்னை பெரம்பூரில் திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பெரம்பூா் துளசிங்கம் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (56). இவரது கணவா் இறந்துவிட்டாா். திமுக கட்சியில் நிா்வாகியாக இருக்கும் ராஜேஸ்வரிக்கு பாலகுமாா் என்ற மகனும், பிரகதி என்ற மகளும் உள்ளனா். தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் பாலகுமாா், ராஜேஸ்வரி வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வசிக்கிறாா்.

ராஜேஸ்வரி, தனது மகள் பிரகதியுடன் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒசூரில் உள்ள தனது சகோதரா் வீட்டுக்கு சென்றாா். இந்நிலையில் ராஜேஸ்வரி வீட்டின் கதவு பூட்டு ஞாயிற்றுக்கிழமை உடைந்து கிடந்தது. இதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா், ராஜேஸ்வரிக்கும், அருகே வசிக்கும் அவா் மகன் பாலகுமாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த பாலகுமாா் வந்து வீட்டுக்குச் சென்று பாா்த்தாா். அப்போது அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த 35 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்து செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.