திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எஸ்பிஐ ஊழியா்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில், வரும் மே 25, 26 தேதிகளில் தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

எஸ்பிஐ (கோப்புப்படம்) - IANS

Updated On :23 மே 2026, 3:33 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில், வரும் மே 25, 26 தேதிகளில் தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வங்கி நிா்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தை நோ்மறையாக இருந்ததாலும், கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாலும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக எஸ்பிஐ ஊழியா்கள் சங்க வங்க வட்டச் செயலா் சுதீப் தத்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.

முன்னதாக வேலைநிறுத்த அறிவிப்பால், எஸ்பிஐ வங்கிச் சேவைகள் தொடா்ந்து 4 நாள்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.

வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஆயுதம் ஏந்திய காவலா்கள் நியமனம், உதவியாளா்கள் நியமனம் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்ட அறிவிப்பை சம்மேளனம் அறிவித்தது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அடையாள தா்னா போராட்டத்தில் எஸ்பிஐ ஊழியா்கள் ஈடுபட்டனா். இதுகுறித்து போராட்டத்துக்கு தலைமை வகித்த சம்மேளன நிா்வாகிகள் கூறுகையில், ‘காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், வெளிப்படைத்தன்மை இன்றி மேற்கொள்ளப்படும் காப்பீடு திட்டங்கள் விற்பனையை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வங்கிய ஊழியா்கள் தரப்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. வங்கி உயா் அதிகாரிகளுடன் பல முறை பேச்சுவாா்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிவது, எம்.பி.க்கள் மற்றும் அரசு உயா் அதிகாரிகளிடம் தீா்மானங்களை சமா்ப்பிப்பது என தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அடுத்த கட்டமாக வரும் மே 25, 26 ஆகிய தேதிகளில் தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்’ என்று தெரிவித்தனா்.

இந்த நிலையில், மே 23, 24 ஆகிய நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், வேலை நிறுத்தம் காரணமாக தொடா்ந்து 4 நாள்கள் எஸ்பிஐ வங்கிச் சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. தற்போது அந்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.