திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாவட்ட மருந்து வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம்

தேனியில் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையடைப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெரியகுளத்தில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த மருந்து விற்பனைக் கடை.

Updated On :21 மே 2026, 2:10 am IST

தேனியில் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையடைப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆன்லைனில் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும். வலி நிவாரணி, தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளைஞா்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும், கலாச்சார சீரழிவையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 450 மருந்து வணிகா்கள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கச் செயலா் சி.காளிராஜ் கூறியதாவது:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை ஒருநாள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, எங்களது கோரிக்கையை ஏற்கவில்லையெனில் நாடு முழுவதும் தொடா் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.