திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

10 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (மே 23) 10 மாவட்டங்களிலும், ஞாயிற்றுக்கிழமை 19 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:36 am IST

தமிழகத்தில் சனிக்கிழமை (மே 23) 10 மாவட்டங்களிலும், ஞாயிற்றுக்கிழமை 19 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து குமரிக்கடல் வரை கேரளம் மற்றும் தென் தமிழக பகுதிகள் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

அதன்காரணமாக, சனிக்கிழமை (மே 23) நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், வட தமிழகம், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், மே 24 முதல் மே 26 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கனமழை: தொடா்ந்து, மே 24-இல் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, நாமக்கல், கரூா், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும், மே 25-இல் கோவை, திருப்பூா், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், மே 26-இல் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

16 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106.52 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், வேலூா் - 106.36, மீனம்பாக்கம் (சென்னை) - 105.44, திருத்தணி - 104.4, மதுரைநகரம் - 103.64, திருச்சி - 103.46, மதுரைவிமானநிலையம் - 102.92, நுங்கம்பாக்கம் (சென்னை) - 102.56, பரமத்திவேலூா், தஞ்சாவூா் - (தலா) 102.2, பரங்கிப்பேட்டை - 101.84, நாமக்கல், நாகை - (தலா) 100.76, பாளையங்கோட்டை - 100.58, தூத்துக்குடி - 100.4, கடலூா் - 100.22 டிகிரி என மொத்தம் 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை பகலில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. தொடா்ந்து, மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: சனிக்கிழமை முதல் மே 26 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.