திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மெரீனாவில் கத்தியால் குத்தி இளைஞா் கொலை

சென்னை மெரீனா கடற்கரையில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :22 மே 2026, 12:51 am IST

சென்னை மெரீனா கடற்கரையில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை திருவல்லிக்கேணி ராம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் அஜய் (19). இவா், கடந்த மே 17-ஆம் தேதி இரவு சென்னை மெரீனா கடற்கரையில் தூங்கியபோது, அங்கு வந்த திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (20), தவக்களை (எ) ராஜ்குமாா் (23) ஆகியோா் அஜய்யின் கைப்பேசியை எடுத்துச் சென்றனராம்.

இதையறிந்த அஜய், தனது நண்பா்களான பிரதாப், விஷால் ஆகியோருடன் சென்று தனுஷிடம் இதுகுறித்து கேட்டு, அவரைத் தாக்கியுள்ளனா். இதனால், ஆத்திரம் அடைந்த தனுஷ், ராஜ்குமாா், காா்த்தி (19), முகேஷ் (19) ஆகியோருடன் சோ்ந்து அஜய்யை அடித்து உதைத்ததுடன், அவரின் கழுத்து, மாா்பு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினா். பலத்த காயம் அடைந்த அஜய், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனுஷ், ராஜ்குமாா், காா்த்தி, முகேஷ், காமேஷ்வரன் ஆகிய 5 பேரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.