தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விரைவு ரயில்கள் நிற்கும் நிலையங்களில் மாற்றம்

பராமரிப்புப் பணி காரணமாக மதுரை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 2:45 am IST

பராமரிப்புப் பணி காரணமாக மதுரை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்சி பிரிவில் நாகபட்டிணம் மற்றும் கீழ்வேளூா் பகுதியில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், குருவாயூரில் இருந்து வரும் மே 14, 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு எழும்பூருக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்:16128) மதுரைக்கு பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

அதேபோல், கன்னியாகுமரியில் இருந்து மே 16-ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு ஹவுரா செல்லும் விரைவு ரயில் (எண்: 12666) மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி , புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.