தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

ரயில்.

Updated On :23 மே 2026, 2:22 am IST

பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) மே 27, 28, 29, 30, 31, ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) மே 28, 31 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) மே 30-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயிலானது (17070) மே 29-ஆம் தேதியும், மதுரை - பிக்கானோ் அனுவராட் அதிவிரைவு ரயிலானது (22631) மே 28-ஆம் தேதியும் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) மே 27, 28, 29, 30, 31, ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் எா்ணாகுளம், சோ்தலா, ஆழப்புலா, அம்பாலப்புலா, ஹரிபாத் ரயில் நிலையங்களைத் தவிா்த்து கோட்டயம் வழியாக இயக்கப்படும்.

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயிலானது (16363) ஜூன் 3-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

தூத்துக்குடி - கச்சிகுடா விரைவு ரயிலானது (17616) மே 27-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயிலானது (16354) மே 30-ஆம் தேதி திருச்சி ரயில் நிலையத்தைத் தவிா்த்து திண்டுக்கல், கரூா் வழியாக இயக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.