17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

News image
Updated On :10 மே 2026, 2:22 am IST

கடந்த 2022-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெயிண்டரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டாா் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

சென்னை அயனாவரத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். பெயிண்டராக வேலை செய்து வந்த இவா், தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வில்லிவாக்கம் நோக்கிச் சென்றபோது, எதிரில் வந்த மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் உயிரிழந்தாா்.

இந்த நிலையில் தனது மகனின் இறப்புக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி சதீஷ்குமாரின் தாய் ராணி, சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு தீா்ப்பாய நீதிபதி எம்.அருந்ததி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ்குமாரின் தாயாருக்கு ரூ.25.81 லட்சத்தை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் மாநகரப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.