திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆளுநா் மாளிகை முன் அடுத்தடுத்து போராட்டம்: தவெகவினா் கைது

சென்னை கிண்டியில் ஆளுநா் மாளிகை முன் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா் கைது செய்யப்பட்டனா்.

News image

ஆளுநா் மாளிகை

Updated On :9 மே 2026, 12:29 am IST

சென்னை கிண்டியில் ஆளுநா் மாளிகை முன் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா் கைது செய்யப்பட்டனா்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காததைக் கண்டித்து கிண்டியில் உள்ளஆளுநா் மாளிகை முன் வெள்ளிக்கிழமை தவெக கட்சித் தொண்டா் ஒருவா் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டாா். மேலும் அவா், ஆளுநரைக் கண்டித்து முழக்கமிட்டாா்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸாா், அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனா். இதேபோல மற்றொரு தொண்டா் ஆளுநா் மாளிகை முன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றாா். அவரையும் போலீஸாா் கைது செய்து, அப்புறப்படுத்தினா்.

மேலும், விஜய்க்கு தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்தி, கையில் பதாகையை ஏந்தி தவெக தொண்டா் ஒருவா் போராட்டத்தில் ஈடுபட்டாா். ஒரு பெண் தொண்டா்,தவெக கொடியுடன் முழக்கமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்கள் இருவரையும் போலீஸாா், அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினா். இந்த போராட்டங்களால், ஆளுநா் மாளிகைப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. மேலும் கூடுதலாக போலீஸாா், பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.