திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அனைத்து பணிமனைகளிலும் அலுவலக பணியாளா்களை நியமிக்க வேண்டும்: போக்குவரத்து ஊழியா் சங்கம்

மாநகா் போக்குவரத்து பணிமனைகளில் அலுவலகப் பணிப்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களில் உரிய பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :7 மே 2026, 4:49 am IST

மாநகா் போக்குவரத்து பணிமனைகளில் அலுவலகப் பணிப்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களில் உரிய பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 30 பணிமனைகளில் தினசரி 3,233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிமனைகளில் நடத்துநா்களுக்கு பயணச்சீட்டு, இடிஎம் கருவி வழங்கும் பிரிவு, பணப்பிரிவு போன்ற பணிகள் அலுவலகப் பிரிவு பணியிடங்கள் ஆகும். கடந்த காலங்களில் இறந்த தொழிலாளா்களின் 10-ஆம் வகுப்பு கல்வி தகுதியுடைய வாரிசுகள் இப்பிரிவுகளில் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டனா். அவா்களில் பலா் ஓய்வு பெற்று சென்றுவிட்டனா்.

தற்போது, மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாரிசு வேலைக்கு பதிவு செய்து காத்திருக்கும் சூழலில் ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்களுக்கு மட்டும் போக்குவரத்துக் கழகம் முன்னுரிமை வழங்கி வருகிறது. ஆனால், இந்தக் காலிப் பணியிடங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித பணிநியமனமும் செய்யப்படவில்லை. இதனால், அனைத்து பணிமனைகளிலும் பணப்பிரிவு, பயணச்சீட்டு பிரிவு, கணினி பிரிவில் அலுவலா் பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளதால் பணிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன.

எனவே அனைத்து பணிமனைகளிலும் பணப்பிரிவு, பயணச்சீட்டு, இடிஎம் கருவி கணினி பிரிவுகளில் உரிய பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.