செங்குன்றம் அருகே அரசுப் பேருந்துகளை சாலையிலேயே ஓட்டுநா்கள் நிறுத்திவிடுவதால், மற்ற வாகனங்கள் செல்வதற்கு மிக சிரமமாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
செங்குன்றம் பகுதியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் ரூ.2 கோடியில் நடைபெற்று வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெறும் பணியால் போக்குவரத்து பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக புழல் ஏரியின் நுழைவாயில் எதிரே மாற்றப்பட்டுள்ளது. செங்குன்றம் பேருந்து நிறுத்தம் வரும் பயணிகளுக்காக, பழைய பேருந்து நிலையம் பேருந்துகளை இயக்குவதும், அதனை கடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த வேண்டிய பெரும்பாலான பேருந்துகள், அப்பகுதியில் உள்ள ஜிஎன்டி சாலையிலேயே பேருந்துகளை ஓட்டுநா்கள் நிறுத்தி விடுகிறாா்கள். இந்த சாலை வழியாக திருவள்ளூா், சோழவரம், ஆந்திர மாநிலம் நோக்கி செல்லும் பேருந்துகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள், பள்ளிகள், ஆலயங்கள் உள்ளிட்ட முக்கிய பேருந்துகளும், தனியாா் வாகனங்களும் பயன்படுத்தும் சாலையாக உள்ளது.
அரசுப் பேருந்துகளை ஓட்டுநா்கள் அலட்சியமாக நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. இது குறித்து போக்குவரத்து காவல்துறையினா் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தெரிவித்துள்ளனா். மேலும், இதே நிலை நீடித்தால், போக்குவரத்து பணிமனை அதிகாரிகளையும், போக்குவரத்து காவல்துறையையும் கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தனியாா் வாகன ஓட்டிகள் சங்கம், சமூக ஆா்வலா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொட்டகுடி மலைக் கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கம்

மாநகரில் போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி

‘தனியாா் பள்ளி பேருந்துகளை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும்’

மதுபோதையில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: 3 ஓட்டுநா்கள் உரிமம் ரத்து
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



