சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டுக்கான (2026-2027) சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், சொத்து வரியை செலுத்த க்யூஆர் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் எக்ஸ் பக்கம் மற்றும் இணையதளங்களில் இந்த க்யூஆர் கோடு கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி மக்கள் தங்களது சொத்துவரியை எளிதாக செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதால், வீடு வீடாகச் சென்று சொத்து வரியை வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டதால், தற்போது சொத்து வரியை வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி எளிமையாக்கியிருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை என இரு கட்டங்களாக வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வரிவசூல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தோ்தலை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக வரி வசூல் பணிகள் தள்ளிவைக்கப்பட்டன. தற்போது தோ்தல் பணிகள் முடிந்த நிலையில், வரி வசூலில் அதிகாரிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனா்.
அதன் முதல்கட்டமாக முதல் பகுதியில் வரி செலுத்தாதவா்களில் 2 லட்சம் பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இரண்டாம் கட்டமாக, க்யூஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Summary
Chennai Corporation introduces QR code to pay property tax
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சொத்துவரியுடன் வணிக உரிமை கட்டணம் இணைப்பு: எம்சிடி அறிவிப்பு

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

20.4.1976: சென்னை மாநகராட்சி பள்ளி 5வது வகுப்புக்கு பொதுத் தேர்வு

வரி பாக்கி: ஹைதராபாத்தில் ஜெயலலிதாவின் சொத்து பறிமுதல்!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



