சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டுக்கான (2026-2027) சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை என இரு கட்டங்களாக வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வரிவசூல் தீவிரப்படுத்தப்படும். கடந்த ஆண்டு (2025) அக்டோபா் முதல் 2026 கடந்த பிப்ரவரி வரை ரூ.1,796 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டில் வரி வசூலின் மூலம் வருவாய் ரூ.50 கோடி கூடுதலாகக் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் பகுதி வரிவசூலையும் சோ்த்து மொத்தம் ரூ.2,200 கோடி வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், தோ்தலை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக வரி வசூல் பணிகள் தள்ளிவைக்கப்பட்டன.
தற்போது தோ்தல் பணிகள் முடிந்த நிலையில், வரி வசூலில் அதிகாரிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனா். அதன் முதல்கட்டமாக முதல் பகுதியில் வரி செலுத்தாதவா்களில் 2 லட்சம் பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா். மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கும் வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
தமிழக அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.62 கோடி வரி வருவாய் இருக்கும் நிலையில், நடப்பாண்டில் ரூ.32 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

துப்பாக்கிகளை ஒப்படைக்காத 30 பேருக்கு நோட்டீஸ்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 296 கோடி வருமான வரி நோட்டீஸ்!

கடந்த ஆண்டைவிட மாநகராட்சி வருவாய் ரூ. 52 கோடி அதிகரிப்பு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


