சென்னை, ஏப். 19 - சென்னை மாநகரில் உள்ள மாநகராட்சி ஆரம்ப, நடுத்தரப் பள்ளிகளில் ஐந்தாவது வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் ஆரம்ப, நடுத்தரப் பள்ளிகளில் 350-ல் ஐந்தாவது வகுப்பில் ஏறத்தாழ 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இப்போதுள்ள நடைமுறையின்படி ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து தேர்வு நடத்துகிறது.
இதற்குப் பதிலாக மாநகராட்சிப் பள்ளிகளில் ஐந்தாவது வகுப்பில் படிக்கும் எல்லா மாணவ, மாணவிகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சித் தனி அதிகாரி யோசனை கூறியிருந்தார்.
இந்த ஆண்டு முதலே மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்த யோசிக்கப்பட்டது. ஆனால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடிக்க போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் அடுத்த ஆண்டு முதல் இந்தப் பொதுத் தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பாக்.குடன் ராஜ்கந்திர உறவு பற்றியும் பேச டில்லி தயார் - பூட்டோவுக்கு இந்திரா காந்தி கடிதம்
புது டில்லி, ஏப். 19- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ராஜதந்திர உறவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் உட்பட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தீராமலிருக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க தான் தயாராக இருப்பதாக இந்தியா, பாகிஸ்தானுக்குத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11-ந் தேதி பிரதம மந்திரி இந்திரா காந்தி, பாகிஸ்தான் பிரதம மந்திரி பூட்டோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த விஷயங்கள் பற்றி விவாதிக்க இந்தியா தயாராயிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மார்ச் 27-ந் தேதி பூட்டோ எழுதிய கடிதத்துக்குப் பதிலளித்து இந்திரா காந்தி இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.
இம்மாத ஆரம்பத்தில் பூட்டோவின் கடிதம் டில்லிக்குக் கிடைத்ததுள்ளது. இரு நாடுகளின் வான்வெளி மீது விமானப் பயணங்கள் நிறுத்தம் சம்பந்தமாக சர்வதேச விமானப்போக்குவரத்து ஸ்தாபனத்திலிருந்து தன்னுடைய வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளத் தயாராயிருப்பதாக பூட்டோ தம்முடைய கடிதத்தில் கூறியிருந்தார். "சகஜ உறவை" ஏற்படுத்திக்கொள்வதற்காள மேல் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்த உணர்வுக்கு இணங்க இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தியா சென்ற ஆண்டே கூறியிருந்தது.
1971-ம் ஆண்டு ஆரம்பத்தில் இந்திய விமானம் வழிமறிக்கப்பட்டு, லாகூருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டன. இவற்றை மீண்டும் தொடங்குவது பற்றி இரு நாடுகளிடையே இரண்டு முறை நடந்த பேச்சுக்களிலும் உடன்பாடு ஏற்படவில்லை. ...
Summary
April 20, 1976: Common Examination for 5th Grade at Chennai Corporation Schools
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



