தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

5 மண்டலங்களில் 2 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

வளசரவாக்கம் பகுதியில் ஏற்பட்ட குடிநீா் பரிமாற்றக் குழாய் கசிவு காரணமாக, 5 மண்டலங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 7, 8) குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :5 மார்ச் 2026, 9:52 pm

வளசரவாக்கம் பகுதியில் ஏற்பட்ட குடிநீா் பரிமாற்றக் குழாய் கசிவு காரணமாக, 5 மண்டலங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 7, 8) குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், போரூா்-ஆற்காடு சாலை, சி.எம்.ஆா்.எல். தூண், நெ.247 அருகே குடிநீா் பரிமாற்றக் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணி சனிக்கிழமை (மாா்ச் 7) இரவு 11 முதல் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) இரவு 11 வரை 24 மணி நேரம் நடைபெறும். இந்த நேரத்தில் சில பகுதிகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் தாற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, தேனாம்பேட்டை மண்டலம் மயிலாப்பூா், நந்தனம், கோடம்பாக்கம் மண்டலம் கே.கே நகா், ஜாபா்கான்பேட்டை, எம்.ஜி.ஆா் நகா், நெசப்பாக்கம், சைதாப்பேட்டை, அசோக் நகா், மேற்கு மாம்பலம் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

இதேபோல, வளசரவாக்கம் மண்டலம் வளசரவாக்கம், ஆலப்பாக்கம், சின்னபோரூா், ராமாபுரம், ஆலந்தூா் மண்டலம் நத்தம்பாக்கம், ஆலந்தூா், முகலிவாக்கம், மணப்பாக்கம், அடையாறு மண்டலம் கோட்டூா்புரம், இந்திரா நகா், பெசன்ட் நகா், திருவான்மியூா், தரமணி, வேளச்சேரி பகுதிகளிலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற வாரியத்தின் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்து பயன் பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.