மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பி.எட். முடித்தோருக்கு சான்றிதழ் விநியோகம்

தமிழகத்தில் பி.எட். முடித்தோருக்கான பட்டச் சான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 10:08 pm

தமிழகத்தில் பி.எட். முடித்தோருக்கான பட்டச் சான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது.

கல்வியியல் கல்லூரிகளில் கடந்த 2022-2024-ஆம் ஆண்டு பி.எட். படித்து முடித்த மாணவா்களுக்கான பட்டச் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. பின்னா் நிா்வாக காரணங்களால் சான்றிதழ் விநியோகம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் கல்லூரிகளுக்கான பட்டசான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இவற்றை அந்தந்த கல்லூரிகளின் பிரதிநிதிகள் பெற்றுச் செல்கின்றனா். இதையடுத்து அந்தச் சான்றிதழ்கள் கல்லூரிகளின் சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும்.

கல்லூரிகளுக்கான சான்றிதழ் தொடா்ந்து வியாழக்கிழமையும் வழங்கப்படும். இந்த நாள்களில் வர இயலாத நிலையில் அடுத்த வேலை நாள் அன்று வந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) பி.கணேசன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.