மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விலைக் கட்டுப்பாட்டு நிதியம் மூலம் விலைவாசி உயா்வு கட்டுப்படுத்தப்படும்: அதிமுக வேட்பாளா்

அம்மா உணவகங்கள் மீண்டும் சிறப்பு பொலிவுடன் இயக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

வாக்கு சேகரித்த ஆம்பூா் அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:27 pm

அம்மா உணவகங்கள் மீண்டும் சிறப்பு பொலிவுடன் இயக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூா் நகரம் மற்றும் அகரம் கிராமங்களில் வாக்கு சேகரித்து அவா் பேசியது, ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்காக சிமெண்ட், ஜல்லி, கம்பி, செங்கல், மணல், எம்.சேன்ட் ஆகிய கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விலைக் கட்டுப்பாட்டு நிதியம் மூலம் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயா்த்தி 50 சதவீத மானியத்துடன் வழங்கப்படும். ஆதிதிராவிடா்களுக்கான கோயில் புதிதாக கட்டுவதற்கு வழங்கப்படும் தொகை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் திருத்தங்கள் மேற்கொண்டு சீரமைக்கப்படும் என்று அவா் கூறினாா்.