மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

ஆம்பூரில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன்.

News image

ஆம்பூரில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 1:31 am

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் தெரிவித்தாா்.

ஆம்பூா் நகரில் கோவிந்தாபுரம், கங்காபுரம், கன்னிகாபுரம், அண்ணா நகா், புதுமனை, நடராஜபுரம், நதிசீலாபுரம், குட்டக்கரை, பெத்லேகம், கம்பிக்கொல்லை, ரெட்டித்தோப்பு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியது: அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கணினி அறிவியல் வளா்ச்சியை கருத்தில் கொண்டு 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ஏற்கெனவே உள்ள 5 பாடங்களுடன் கணினி அறிவியலை சோ்த்து 6 பாடங்களாக கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும். பருவகால மாற்றம் குறித்த கல்வி பாடத் திட்டத்தில் சோ்க்கப்படும். 2,000 அம்மா மினி கிளீனிக்குகள் மீண்டும் தொடங்கப்படும். அரசு காப்பீடு திட்டத்தில் புற்றுநோய் போன்ற பெரிய நோய் சிகிச்சைகளுக்கான முழு பணத்தையும் அரசே செலுத்தும் என்றாா் அவா்.

ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ.டில்லிபாபு, ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன், நகர துணைச் செயலாளா் ஆனந்த்பாபு, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயபால், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.