திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவண்ணாமலைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

News image

கோப்புப்படம்

Updated On :3 மார்ச் 2026, 12:24 am

சென்னை: பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுத்த செய்திக்குறிப்பு: திருவண்ணாமலையில் பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) காலை 10.10 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண் 06130) பிற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06129) மாலை 4.15 மணிக்கு விழுப்புரம் நிலையத்தை அடையும்.

இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, அய்யாண்டூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், தண்டரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.